Post

Share this post

ஓய்வு பெறும் இந்திய கிரிக்கெட் அணி தலைவர்!

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவர் மிதாலி ராஜ் ஓய்வு பெறுவதாக நேற்று (ஜூன் 8) அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்து மிதாலி ராஜ் கூறியிருப்பதாவது, “ இத்தனை ஆண்டுகள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை ஆண்டுகள் கேப்டனாக இருந்தது என்னை மட்டுமின்றி அணியினையும் வடிவமைக்க உதவியது.” என்றார்.
இந்திய மகளிர் அணிக்காக 232 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7,805 ஓட்டங்கள் குவித்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 699 ஓட்டங்களும், 89 டி20 போட்டிகளில் விளையாடி 2,364 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக ஓட்டங்களை குவித்து முதலிடத்தில் உள்ளார் மிதாலி ராஜ்.

Leave a comment