OOSAI RADIO

Post

Share this post

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வர்த்தகர்!

நுவரெலியா – நானுஓயா வாழமலை தோட்டத்தில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வர்த்தகர் ஒருவரே நேற்று முன்தினம் (18) கைது செய்ப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை அனுமதித்துள்ளதாகவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தனது வீட்டில் சிறிய வர்த்தக நிலையம் ஒன்று நடத்தி வருவதாகவும் சிறுமி வர்த்தக நிலையத்திற்கு வந்த போது அவரை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சிறுமியின் நிலை நீண்ட நாட்களாக பெற்றோர்களுக்குத் தெரியாது இருந்ததாகவும் கடந்த (17-06-2024) ஆம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இதனையடுத்து மாணவி கர்ப்பமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் கைது சந்தேக நபரை நேற்று (19) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter