OOSAI RADIO

Post

Share this post

மது விற்பனையால் பல்லாயிரம் கோடி வருமானம்!

தமிழ் நாட்டில் கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத சாராயத்தினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்று தமிழக சட்டசபையில் மதுவிலக்கு துறை கொள்கை விளக்க குறிப்பு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, 2023 – 2024 ஆம் ஆண்டில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக 12,431 வழக்குகள் பதியப்பட்டு, 12,422 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 4,64,152 லிட்டர் சட்டவிரோத மதுபானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தமிழ்நாட்டில் 2023 – 2024 ஆம் ஆண்டில் மதுபானத்தில் இருந்து வருமானம் 45,855.67 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்இது கடந்த ஆண்டைவிட 1,734.54 கோடி ரூபாய் கூடுதலாகும்.

இதற்கிடையில் 2022 – 2023ல் மதுபானம் மூலம் 44,121.13 கோடி ரூபாய் வருவாய் கிடைக்க பெற்றுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Courtesy: Sivaa Mayuri

Leave a comment

Comments · 1

  • Kodeeswaran · 24/06/2024

    இதில் வருமானம் என்று சொல்றியள் இதனால் ஏற்படும் நோய்கள் மற்றும் ஏனைய பதிப்புகளிற்கு செலவாகும் தொகை இதனைவிட பலமடங்கு இதனையும் வெளியில் சொல்லுங்கள்.

Type and hit enter