OOSAI RADIO

Post

Share this post

வெப்ப அலை – ஒரு வாரத்தில் 200 பேர் பலி

வட இந்தியாவை தாக்கும் வெப்ப அலை, கடந்த வாரத்தில் மாத்திரம் புதுடில்லியில் கிட்டத்தட்ட 200 வீடற்ற மக்கள் பலியானதாக வீடற்றவர்களுக்கு உதவும் ஒரு தன்னார்வக் குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களில் 52 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் திறந்த வெளியில் வேலை செய்யும் ஏழைகள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை இந்த கோடைக்காலத்தில் இந்தியாவில் 40,000 க்கும் மேற்பட்டவர்கள் வெப்ப பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் வழக்கமான வெப்ப அலையை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமான வெப்பம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை அலுவலகம் தகவல்படி, புதுடில்லியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர், நேற்றைய இரவு நேர வெப்பநிலை 35.2 டிகிரி செல்சியஸ் (95 டிகிரி பரன்ஹீட்) ஆக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Courtesy: Sivaa Mayuri

Leave a comment

Type and hit enter