இளநீரில் தண்ணீர் எப்படி உருவாகிறது தெரியுமா?

இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது. இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் பயனுள்ளதாக இருக்கும். இளநீரில் எலக்ட்ரோலைட்டுகள், ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன.
உடலில் நீர்ச்சத்து குறைவை ஏற்படுத்தாது. இளநீரின் உள்ளே இருக்கும் இந்த நீர் தேங்காயின் எண்டோஸ்பெர்ம் பகுதி. இந்த பகுதிதான், நன்கு வளர்ந்து தேங்காயாக மாறுகிறது.
எண்டோஸ்பெர்ம் அல்லது கருப் பை வளரும் கருவுக்கு ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. தென்னை மரம் தன் செல்கள் மூலம் வேர்களில் இருந்து தண்ணீரை எடுத்து, இந்த பகுதிக்கு கொண்டு வருகிறது.
இந்த நீரில் எண்டோஸ்பெர்ம் கரையும்போது, கெட்டியாகிவிடும். தாவர வேர்களால் உறிஞ்சப்படும் நீர், செல்கள் வழியாக கொண்டு செல்லப்பட்டு, காய்களில் நீர் கூறுகளை உருவாக்குகிறது. தேங்காய் முதிர்ச்சியடையும்போது, தண்ணீர் வற்றத் தொடங்குகிறது.