OOSAI RADIO

Post

Share this post

பாத்ரூம் வீடியோ – போதை சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்!

பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் த்ரிஷா குறித்து பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

கடந்த 22-ம் தேதி விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் த்ரிஷா. விஜய் உடன் எடுத்துக் கொண்ட செல்பியை பதிவிட்ட அவர், ஆங்கில் பாடல் வரிகளையும் சேர்த்து பதிவிட்டிருந்தார். “ நீ தான் என் காதல்.. சாகும் வரை நீ தான் என் காதல்” என்ற வார்த்தைகள் அதில் இடம்பெற்றிருந்தது.

இதனால் த்ரிஷாவும் விஜய்யும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பலரும் சமூக வலைதள பக்கங்களில் கருத்து பதிவிட தொடங்கினர். மேலும் விஜய்யும் – த்ரிஷாவும் ஒன்றாக இருக்கும் படங்களும் வைரலானதால் விஜய் – த்ரிஷா விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.

இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் சபிதா ஜோசப் த்ரிஷா குறித்து பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “ 16 வயதிலேயே த்ரிஷா திரைத்துறையில் காலடி பதித்தார். மாடலிங்கில் ஆர்வம் கொண்ட த்ரிஷா முதல் மாடலிங் செய்து வந்தார். பின்னர் மிஸ் சென்னை, மிஸ் சேலம் ஆகிய படங்களை பெற்றார்.

இதை தொடர்ந்து ஆல்பம் ஒன்றில் த்ரிஷா நடித்தார். இந்த ஆல்பம் மூலம் தான் அவருக்கு பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைதத்து. ஆனால் இந்த படம் வெளியாக தாமதமான நிலையில், அவர் நடித்த மௌனம் பேசியதே படம் முதலில் வெளியானது. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.

எனினும் அவருக்கு பிரேக்த்ரூவாக அமைந்த படம் என்றால் அது கில்லி தான். வெற்றிகள் மட்டுமின்றி, திரை வாழ்க்கையில் த்ரிஷா சந்தித்த அவமானங்களும் அதிகம். ஒரு முறை த்ரிஷா பாத்ரூமில் குளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படம் ஒரு வார பத்திரிகையிலும் வெளியானது. இதற்காக அந்த பத்திரிகை மீது வழக்கு போட்டார் த்ரிஷா.

தனது கேங் உடன் சேர்ந்து பார்ட்டிகளில் மது குடித்து விட்டு கும்மாளம் அடிப்பதாகவும் தகவல் வெளியானது. இது தொடர்பான போட்டோக்களும் வெளியானது. விக்ரம் முதல் விஜய் வரை பல நடிகர்களுடன் கிசுகிசுவில் சிக்கினார். முதலில் விக்ரம் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

பின்னர் விஜய்யுடன் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் விஜய் உடன் கிசுகிசுக்கப்பட்டார். இதனால் விஜய் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. எனினும் இந்த தகவலை பின்னர் த்ரிஷா மறுத்திருந்தார்.

பொதுவாக ஹீரோக்கள் ஒரே ஹீரோயினுடன் நடிக்கமாட்டார்கள் அப்படி தான் விஜய் – த்ரிஷா கூட்டணி முறிந்தது. பின்னர் தெலுங்கு நடிகர் ராணா உடன் வைத்து பேசப்பட்டர். இதனிடையே வருண் மணியன் என்ற தொழிலதிபருடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை. த்ரிஷாவுக்கு விலங்குகள் என்றால் கொள்ளை பிரியம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Type and hit enter