OOSAI RADIO

Post

Share this post

உலக அழிவு – விஞ்ஞானிகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்!

உலகத்தின் அழிவு இப்படித்தான் இருக்கும் என்று பலரும் கணித்துள்ள நிலையில், வைரஸ் காரணமாகவோ, அணுசக்தி யுத்தத்தின் காரணமாகவோ உலகம் அழியாது என்றும், இதுதான் உண்மையான ஆபத்து என்றும் விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

பூஞ்சையால்தான் உலக அழிவு குறிப்பாக, மனிதர்களின் அழிவு இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூஞ்சையால் ஏற்படும் அழிவு மனித இனத்தையே அழித்துவிடும் என்கிறார் நுண்ணியிரியலாளர் ஆர்டுரோ காஸடேவால்.

லாஸ்ட் ஆஃப் அஸ் தொடரில் பூஞ்சை பாதிப்பு குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதேபோல், பெட்ரோ பாஸ்கல் மற்றும் பெல்லா ராம்சே நடித்த அபோகாலிப்டிக் தொடர் ஒரு பெரிய பூஞ்சை தொற்றுநோய் மனித குலத்தின் பெரும்பகுதியை அழித்துவிட்டால் என்ன நடக்கும் என்பதைக் காட்டுகிறது.

பூஞ்சை வைரஸ் கார்டிசெப்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் ஜாம்பி போன்ற உயிரினங்களாக மாறுகிறார்கள்.

டெய்லி ஸ்டார் அறிக்கையின்படி, அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள புகழ்பெற்ற ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பொது சுகாதாரப் பள்ளியில் பணிபுரியும் பேராசியர் நுண்ணியிரியலாளர் ஆர்டுரோ காஸடேவால், 67 வகையான பூஞ்சைகள் மனித குலத்திற்கு உண்மையான அச்சுறுத்தல் என்று தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தின் விளைவாக பூஞ்சைகள் மனித குலத்தின் மீது புதிய நோய்களைக் கட்டவிழ்த்துவிட வாய்ப்புள்ளது. சில பூஞ்சைகல் முன்னோடியில்லாத வழிகளில் இன்னும் பல மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும், புதிய நோய்களை ஏற்படுத்தும் திறன் கொண்டவை என்பதற்கான வளர்ந்து வரும் சான்றுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter