OOSAI RADIO

Post

Share this post

திருமண மோசடி – பெண்ணுக்கு எய்ட்ஸ் – மாப்பிள்ளைகளை தேடும் பொலிஸார்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் அவரின் தாய் உள்பட 7 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது.

அந்த பெண் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்த பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் தாயும், மற்ற சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள அந்தப் பெண்ணுக்கு சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு எச்.ஐ.வி. இருப்பது உறுதியானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அந்தப் பெண் திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களைத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, அந்தப் பெண்ணுடன் தொடர்பிலிருந்த 3 மாப்பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.

மேலும், இந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரேனும் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

உலகை அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இந்தியா பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு பிரசாரங்களையும் செய்து வருகிறது.

Leave a comment

Type and hit enter