Post

Share this post

ஏழை குடும்பங்களுக்கு ஜூலை முதல் கொடுப்பனவு!

வாழ்க்கை செலவுக்கு உதவும் வகையில் ஏழ்மை குடும்பங்களுக்கான முதலாவது கொடுப்பனவு ஜூலை 14 முதல் வங்கிகளுக்கு அனுப்பப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜூலை இறுதிக்குள் எட்டு மில்லியனுக்கும் அதிகமான பிரித்தானிய குடும்பங்களுக்கு 326 பவுண்ட்ஸ் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலையுதிர்காலத்தில் 324 பவுண்ட்ஸ் கிடைக்கும் என்றும் பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் கட்டணங்கள் உயரும் போது குடும்பங்களுக்கு உதவுவதற்காக இந்த பணம் வழங்கப்படுகின்றது.

Leave a comment