OOSAI RADIO

Post

Share this post

பெண்ணை கட்டைகளால் தாக்கிய கும்பல்!

மேகாலயாவில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக கூறி ஒரு பெண்ணை சுற்றி கும்பல் ஒன்று கட்டைகளால் தாக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேகாலயாவின் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தாதெங்க்ரே பகுதியில் பெண் பொது இடத்தில் வைத்து கொடூரமாக தாக்கப்படுகிறார். இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவம் குறித்து மற்ற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து மேகாலயா சட்டமன்றக்குழு தலைவர், மகளிர் அமைப்பு தலைவருமான சான்டா மேரி ஷைலா, இந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை காவல் துறையிடம் கேட்டுள்ளார்.

மேலும் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் விவகாரத்தில் விழிப்புடன் இருக்க மேகாலயாவின் 12 மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை அதிகாரிகளை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

Leave a comment

Type and hit enter