OOSAI RADIO

Post

Share this post

தன்னையே ஆபாசமாக வீடியோ எடுத்து வாலிபருக்கு மாணவி செய்த வேலை!

கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 27). இவருக்கும், தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய பிளஸ்-1 மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் இருவரும் நட்பாக பழகியதால் அவர்களது புகைப்படம் மற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரிமாறி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

இதற்கிடையில் மாணவியை காதல் வலையில் சிக்க வைத்த விக்னேஷ், தனது காம வலையில் வீழ்த்த, உனது ஆபாச வீடியோவை எடுத்து அனுப்புமாறு சிறுமியிடம் பேசி மயக்கி உள்ளார். வீடியோவை பார்த்த உடனே டெலிட் செய்து விடுவேன் என கூறவே, சிறுமியும் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் மூலம் விக்னேசுக்கு அனுப்பியுள்ளார். அதை போனின் ஸ்கிரீன் ரெக்கார்டர் மூலம் விக்னேஷ் பதிவு செய்து வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் சில நாள் கழித்து தனியாக ஒரு இடத்திற்கு வர வேண்டும், இல்லையென்றால் உனது ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி தனது தாய் மற்றும் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விக்னேசை பிடித்து வந்து விசாரித்தனர். அப்போது அவர் இதுபோல் பலரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a comment

Type and hit enter