அதிகரித்த மரக்கறிகளின் விலை!
நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், சந்தைகள் மற்றும் மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 900 முதல் 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.
அதேவேளை, முருங்கைக்காய் 1,000 ரூபாவிற்கு மேலாகவும், கிழங்கு ஒரு கிலோக்கிராம் 900 – 1,000 ரூபாவாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஒரு கிலோ கறிமிளகாயின் சில்லறை விலை 900 ரூபாயாகவும் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும் விற் பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.