OOSAI RADIO

Post

Share this post

மனித தோல் செல்களை வைத்து ரோபோ முகம்!

ஜப்பானிய விஞ்ஞானிகள் உயிருள்ள மனித தோல் செல்களில் இருந்து புன்னகைக்கும் ரோபோ முகத்தை உருவாக்கியுள்ளனர்.

மனித தோல் செல்களைப் பயன்படுத்தி, ஓர் ஹ்யூமனாய்ட் ரோபோவுக்கு இயற்கையான புன்னகையை வழங்கும் முகத்தை ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இது மனிதர்களுடனான ரோபோக்களின் தொடர்பு திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இந்த புதிய முகத்தயாரிப்பு முறையில், ஆய்வகக் கூடத்தில் வளர்க்கப்பட்ட மனித தோல் செல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களது கண்டுபிடிப்பை Cell Reports Physical Science என்ற இதழில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் மனித தோல் எவ்வாறு உடலுடன் இயற்கையாக இணைக்கப்படுகிறதோ அதையே இங்கு பின்பற்றியுள்ளனர்.

தோல் தசைகளைப் போன்ற ஒரு கட்டமைப்பை கொலாஜென் மூலம் உருவாக்கி, அதன் மீது உயிரோடு இயங்கும் தோல் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் முகத்தின் தசை அசைவுகளைப் போன்றே தோலும் அசைந்து இயற்கையான புன்னகையை தோற்றுவிக்கிறது.

இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனிதர்கள் மற்றும் ரோபோக்களின் உறவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும்.

மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ரோபோக்கள், மருத்துவம் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த உயிரோடு இயங்கும் தோலுக்கு தன்னைக் குணப்படுத்திக் கொள்ளும் திறனும் உள்ளது.

Leave a comment

Type and hit enter