இலங்கையில் பறவைக்காய்ச்சல்?

இலங்கையில் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பறவைக் காய்ச்சல், ஏவியன் இன்ப்ளூயன்ஸா என்றும் அழைக்கப்படுகிறது. இது மனிதர்களைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை இன்ப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படுகிறது.
அவற்றில் ஒரு விகாரங்கம் H5N1ஆகும். இந்நிலையில் இலங்கையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நபர் வெளிநாட்டை சேர்ந்த ஆண் ஒருவராவார்.
பிசிஆர் பரிசோதனையில் இன்ப்ளுவன்சா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை பறவைக்காச்சல் தொற்று தொடர்பில் அவனதானமாக இருக்குமாறு இலங்கைக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.