சரிகமபா இந்திரஜித், லோஷனுக்கு நடந்தது என்ன?
தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜி தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப பாடல் நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.
அந்தவகையில் கடந்த இரு வாரங்களாக இந்திரஜித் மற்றும் விஜயலோஷன் ஆகியோரின் பாடல்கள் ஒளிபரப்பு செய்யப்பட வில்லை.
இதனால் நாளைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்களுக்கு இலங்கை ரசிகர்கள் காத்திருந்தனர்.
மேலும் குறிப்பாக இந்த வாரமும் Dedication Round தொடர்வதால் போட்டியாளர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மேடையில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்திரஜித் மற்றும் விஜயலோஷன் ஆகியோரின் பாடல்களும், குடும்பங்களும் ப்ரோமோவில் கூட காட்டப்பட வில்லை.
இதேவேளை, இலங்கையிலிருந்து இவர்களின் உறவினர்கள் இந்தியா செல்ல தாமதமாகி விட்டதால் தான் அவர்களின் காட்சிகள் ஒளிபரப்பாக வில்லையா? அல்லது சர்ப்ரைஸாக வைத்திருக்கின்றார்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எது எப்படி இருப்பினும் நாளைய நிகழ்ச்சியை பார்த்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும். என்று ரசிகர்கள் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.