OOSAI RADIO

Post

Share this post

இன்றுபணவரவு கிடைக்க போகும் ராசிகள்…

குரோதி வருடம் ஆனி 17, திங்கட் கிழமையான இன்று (2024.07.01) எந்த ராசியினருக்கு எவ்வாறான பலனாக அமைய போகிறது என நாம் பார்ப்போம்.

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வாழ்க்கைத் துணையின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பிள்ளைகளின் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடித்து மகிழ்வீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்களே சந்திக்கும் வாய்ப்பு உண்டாக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பான வெற்றியை பெற முடியும்.

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலையில் திருப்தியும், நிம்மதியும் கிடைக்கும் நாள். அரசியலில் உள்ளவர்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று உங்கள் வேலையில் பதவி மற்றும் கௌரவம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் உறவு இனிமையாக இருக்கும்.

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள் உங்கள் மதிப்பு மிக்க பொருட்கள் திருடு போக வாய்ப்புள்ளது. உங்கள் நண்பர்களின் ஆதரவு, அனுபவசாலிகளின் ஆலோசனை வியாபாரத்தை மேம்படுத்த நல்ல வாய்ப்பாக அமையும். மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு போட்டிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சுப காரியங்களில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களுக்கு இன்று வணிகம் தொடர்பான பயணங்கள் வெற்றியை தரும். இன்று நிறைய நன்மையும், லாபமும் பெறுவீர்கள். உங்கள் பிள்ளைகளின் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக பேசி மகிழ்கிறீர்கள். பெற்றோருடன் மன வருத்தம் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பேச்சில் நிதானம் தேவைப்படும் நாள். உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் மரியாதை அதிகரிக்கும். வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கல்வித்துறையில் உள்ளவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். சொந்த தொழில் தொடர்பாக அலைச்சல் இருக்கும். இன்று புதிய வருமானம் கிடைக்கும்.

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சமூக பணிகள், சுப நிகழ்ச்சிகளுக்காக பணம் செலவு அதிகரிக்கும். இன்று உங்களின் செயலால் புகழ் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றியை எதிர்பார்க்கலாம். சட்டம் சார்ந்த விஷயத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களை சுற்றியுள்ள சூழல் இனிமையானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பீர்கள். உங்களுக்கு போதுமான பணம் கையிருப்பு இருக்கும். இன்று பெரிய பண பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டிய நாள். உடல் நலம் உங்கள் வேலையில் தொந்தரவு தர வாய்ப்புள்ளது. இன்று உங்கள் வேலைகளை சரியாக திட்டமிட்டு செயல்படுவது நல்லது. முடிந்தவரை ஓய்வு எடுத்துக் கொள்ள நேரத்தை ஒதுக்குவது அவசியம். இன்று குடும்ப வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பண விஷயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்கள் நிதி நிலையை சரியாக கவனித்துக் கொள்வது அவசியம். உங்கள் வேலைகளில் எதிரிகளின் தலையீடு இருக்கும். கவனமாக செயல்படவும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மகர ராசி அன்பர்களுக்கு இன்று பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் வெற்றி கிடைக்கும். எந்த வித சர்ச்சை மற்றும் சட்ட விஷயத்தில் ஈடுபட வேண்டாம். உங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான முயற்சியில் நல்ல பலன் கிடைக்கும். தடைபட்ட வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும்.

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று திடீரென சில உற்சாகம் தரக்கூடிய செய்திகள், பயணங்கள் அமையும். உங்களின் உடல்நலம் சிறப்பாக ஒத்துழைக்கும். உங்கள் வேலைகளை முடிப்பதில் மனைவியிடம் இருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் சிலருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய முதலீடுகள் மூலம் நன்மை பெறுவீர்கள்.

மீன ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். இன்று பெரிய பண பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது. ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய நாள்.

Leave a comment

Type and hit enter