தேன் கலந்த லெமன் ஜூஸின் நன்மைகள்!

பருவம் மாறும்போது நம்முடைய உடலில் சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் வரக்கூடும். இதை சரி செய்ய மாத்திரையோ அல்லது இருமல் சிரப்போ வாங்கி குடிக்கிறோம். அதற்கு பதிலாக லெமன் ஜுஸில் தேன் கலந்து குடித்தால் இந்த பிரச்சினை எது ஏற்படாது.
இது மட்டுமின்றி இந்த லெமன் ஜீஸ் குடித்தால் மேலும் என்னென்ன பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம் என நாம் இங்கு பார்ப்போம்.
தொண்டை வலி குறையும்
தொண்டை வலி இருக்கும் போது லெமன் ஜூஸில் தேன் கலந்து குடிப்பதால், இவை இரண்டிலும் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் நமக்கு தொண்டை வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. தேனில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதோடு சுவாசம் சம்மந்தமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது
அழற்சி எதிர்ப்பு
லெமனில் உள்ள அமிலத்தன்மை சளியை உடைத்து தொற்றுகளை கட்டுப்படுத்துகிறது. இந்த ஜூஸில் சிறிதளவு மிளகு தூளையும் சேர்த்துக் கொண்டால் புண், வலி, வீக்கம் ஆகியவற்றிலிருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த ஜூஸை பருகுவதால் தொண்டையில் உள்ள வறட்சி மற்றும் எரிச்சலை போக்கி ஈரப்பதமாக்குகிறது. லெமனும் தேனையும் பச்சிளம் குழந்தைகளை தவிர அனைவரும் பருகலாம். குழந்தைகளுக்கு தேன் கலக்காமல் தண்ணீரில் லெமன் பிழிந்து கொடுக்கவும்
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
தேன் கலந்த லெமன் ஜூஸோடு பிரெஷ்ஷான இஞ்சி சாறையும் சேர்த்து குடித்தால் குழந்தைகள் உட்பட அனைவரின் தொண்டை புண்களுக்கும் மிகவும் பலனளிக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி சளியை வெளியேற்றுகிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் சிகிச்சையின் பலனை வேகப்படுத்துகின்றன.
இந்த ஜூஸ் செய்யும் முறை
200 மிலி தண்ணீரில் சிறிய துண்டு இஞ்சியை கொதிக்கவிடுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சில துளி லெமன் ஜூஸை சேர்க்கவும். சேர்ந்து நன்றாக கலந்து வாரத்திற்கு 2 முறை குடித்து வந்தால் இந்த பிரிச்சினை எதுவும் இன்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.
தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய சில விடயங்கள்
ஏற்கனவே கூறியிருந்தபடி ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தேன் கொடுக்காதீர்கள். ஏனென்றால் இது குழந்தைகளுக்கு நஞ்சாக மாற வாய்ப்புள்ளது. மேலும் இங்கே கூறப்பட்ட பொருட்களில் யாருக்காவது ஒவ்வாமை இருந்தால் அவர்களும் எச்சரிக்கையோடு இதை அணுக வேண்டும். இயற்கை வைத்திய முறை நமக்கு நிவாரணம் கொடுத்தாலும், அறிகுறிகள் தீவிரமாகவோ அல்லது நீண்ட நாள் இருந்தாலோ மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.