OOSAI RADIO

Post

Share this post

கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி

கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் ஆர்.எல்.ஜாலப்பா பி.யூ.சி. கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவள் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறாள். கடந்த சில நாட்களாக மாணவி வகுப்பறையில் சோர்வுடன் காணப்பட்டாள். இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது.

இதையடுத்து மாணவி கழிவறைக்கு சென்றாள். அப்போது திடீரென்று கழிவறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதையடுத்து பேராசிரியர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தபோது, மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதை பார்த்து பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோலார் புறநகர் போலீசிற்கு பேராசிரியர்கள் தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் குழந்தை, மாணவியை மீட்டு கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது மாணவிக்கு, வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி வாலிபருடன் நெருங்கி பழகி உல்லாசமாக இருந்ததால் அவள் கர்ப்பமாகினாள். மேலும் பெற்றோருக்கு தெரியாமல் மறைத்துள்ளாள். அவர்களும் வயிறு வெளியே தெரியவில்லை என்றதும் கவனிக்கவில்லை.

இந்தநிலையில் கல்லூரியில் வைத்து மாணவி பிரசவ வலி ஏற்பட்டு, குழந்தை பிறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவளது கர்ப்பத்துக்கு காரணமான வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a comment

Type and hit enter