நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் பீட்டர் சீலர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் முதுகுவலி பிரச்சனையால் அவதிப்பட்டார். இந்த நிலையில், அவர் தனது ஓய்வு முடிவினை அறிவித்து உள்ளார்.
பீட்டர் சீலர் நெதர்லாந்து அணிக்காக 57 ஒருநாள் மற்றும் 77 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 உலகக் கிண்ணத்தில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கு எதிராக அவர் 10 ஓவர்களில் 53 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அவர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் யூசுப் பதான் ஆகியோரின் விக்கெட்டை எடுத்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.