UK பொதுத்தேர்தல் – போட்டியிடும் 6 இலங்கையர்கள்!
சர்வதேச மட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பிரிட்டன் பொதுத்தேர்தலில் இன்று (04) நடைபெறவுள்ள நிலையில், முன்னெப்போதையும் விட இம்முறை அதிக எண்ணிக்கையான பிரிட்டன்வாழ் ஈழத்தமிழர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அதன்படி இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட அறுவர் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகும் நோக்கில் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.
தொழிற்கட்சியின் சார்பில் உமா குமாரன் மற்றும் டெவினா போல், கொன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் கெவின் ஹரன், த க்ரீன் கட்சியின் சார்பில் நாராணி ருத்ரா-ராஜன், லிபரல் டெமோகிரட்ஸ் கட்சியின் சார்பில் கமலா குகன் மற்றும் ரிஃபோர்ம் யு.கே கட்சியின் சார்பில் மயூரன் செந்தில்நாதன் ஆகியோரே இன்று நடைபெறும் பிரிட்டன் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.