இன்றைய நாளில் ராஜயோகம் உங்களுக்கு!
குரோதி வருடம் ஆனி 21 வெள்ளிக் கிழமை, இன்று (05) சந்திரன் கும்பம், மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிக ராசியில் உள்ள விசாகம், அனுஷம் நட்சத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
அவ்வாறு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான நாளாக இருக்கும். இன்று தொல்லைகள் அதிகம் சந்திக்க நேரிடும். வாகனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக அதிகமாக சிந்திப்பீர்கள். கடினமான நேரத்தில் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். வருகை துணையின் முழு ஆதரவு இன்று கிடைக்கும்.
ரிஷப ராசி
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் உறவு மேம்படும். உங்களின் அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உங்களின் செயல்களுக்கு நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். நிதிநிலை வலுவாக இருக்கும். நீண்ட காலமாக இருந்த உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். இன்று சமூகம், சமய நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
மிதுன ராசி
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று பழைய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உங்களின் செயல்பாடு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். இளைய சகோதரர் அல்லது பிள்ளைகளால் சில பிரச்சினைகள் ஏற்படும். இன்று உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சிலருக்கு அஜீரண கோளாறு ஏற்படும். உங்களின் பேச்சில் இனிமை தேவை.
கடக ராசி
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் அனுபவத்தின் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள். வணிகத்தில் உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நிதிநிலை முன்னேற்றம் ஏற்படும். ஆசைகள் நிறைவேறும். உற்சாகத்துடன் செயல்பட்டாலும், அவசரமாக எந்த எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். தொண்டு பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
சிம்ம ராசி
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. இன்று சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வேலைகளை முடிப்பதில் எதிரிகளின் தொல்லை ஏற்படும். இன்று குடும்பம் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். எந்த ஒரு முடிவு எடுப்பது தான் தயக்கம் ஏற்படும்.
கன்னி ராசி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். தடைப்பட்ட வேலைகளை முடிக்க தீவிரமாக செயல்படுவீர்கள். இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். பிள்ளைகள், நண்பர்கள் மூலம் மன அழுத்தம் குறையும்.
துலாம் ராசி
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக அமையும். வியாபாரத்தில் நற்பெயர் அதிகரிக்கும். உங்களின் எல்லா வேலைகளும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். உங்கள் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு தேடிவரும். இன்று நீங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிக ராசி
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். இன்று உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் சிறப்பாக நடக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பதட்டமான சூழ்நிலைகள் ஏற்படலாம்.
தனுசு ராசி
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் வேலைகளை முடிப்பதில் அதிக அலைச்சல் ஏற்படும். திட்டமிட்டு செயல்படவும்.இன்று உங்களின் நிதிநிலை வலுப்படும் பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக புதிய யோசனைகள் பிறக்கும்.
மகர ராசி
மகர ராசி அன்பர்களுக்கு இன்று சில விஷயங்களால் மன உளைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் தேவை. இன்று அண்டை வீட்டாரிடம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். இன்று உங்களின் பேச்சில் கட்டுப்பாடும், விட்டுக்கொடுத்த செல்வதும் அவசியம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் புதிய வேகம் பெறும்.
கும்ப ராசி
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று சுப பலன்கள் அதிகம் கிடைக்கும் நாள். இன்று தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் சந்தேகங்களைத் தவிர இருக்க வேண்டியது அவசியம். இன்று உங்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் கிடைக்கும். செல்வாக்கு மிக்க நபர்களின் ஆதரவு பெறுவீர்கள். இன்று பணம் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மீன ராசி
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பிற்கு கடினமாக உழைக்க வேண்டிய நாள். வியாபாரிகளுக்கு சுமை அதிகரித்துக் கொண்டே போகும். கட்டுமான மேற்கொள்பவர்களுக்கு புதிய தலைவலி ஏற்படும். அரசியலில் உள்ளவர்கள் சிலரின் ஆதரவை பெறலாம். தந்தையின் உடல் நிலையில் அக்கறை தேவை.