முடிவுக்கு வரும் முக்கிய சீரியல்!
சன் டிவி தான் தொடர்ந்த தமிழ்நாட்டில் முன்னணி சேனல் ஆக இருந்து வருகிறது. அதற்கு காரணம் அதன் சீரியல்களுக்கு கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங் தான்.
கயல், சிங்கப்பெண்ணே, வானத்தைப்போல என பல தொடர்கள் டிஆர்பியில் டாப் 5 லிஸ்டில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது சன் டிவியின் முக்கிய சீரியல் விரைவில் முடிய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மதியம் 12.30 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் பூவா தலையா சீரியல் தான் முடியப்போகிறது.
கடந்த வருடம் அக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தற்போது 200 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கிறது.
பூவா தலையா சீரியல் கிளைமாக்ஸ் காட்சி விரைவில் வர இருப்பதாக வந்திருக்கும் தகவல், அந்த தொடரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.