OOSAI RADIO

Post

Share this post

சொந்த வீட்டில் தங்காமல் ஹோட்டலில் தங்கும் ஜோதிகா!

தமிழ் சினிமாவில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் 6 ஆண்டுகள் சினிமாவிற்குள் வரவில்லை. பின் 36 வயதினிலே படத்தின் மூலம் சோலோ ஹீரோயின் படங்களில் நடிக்க துவங்கினார்.

இதனை தொடர்ந்து சோலோ ஹீரோயினாக கலக்கி வந்தார். மேலும் சமீபகாலமாக பாலிவுட் பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

தொடர்ந்து இந்தி படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜோதிகா தற்போது பிள்ளைகளின் படிப்பிற்காக மும்பையில் தங்கி வருகிறார். படிப்பு முடிந்தவுடன் சென்னை வந்துவிடுவோம் என கூறியுள்ளார்.

மும்பையில் வசித்து வரும் நடிகை ஜோதிகா, அவ்வப்போது சென்னை வந்தாலும் சூர்யா கட்டியுள்ள பங்களாவில் தங்க மாட்டாராம். பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் தான் தங்குகிறார் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது காட்டு தீ போல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Leave a comment

Type and hit enter