OOSAI RADIO

Post

Share this post

மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.

அதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வுச்சர் மூலம் எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10 வரை நாப்கின்களை கொள்வனவு செய்ய முடியும்.

இதற்கான அனுமதியை கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கியுள்ளார்.

முன்னதாக 2024 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையிலே தற்போது காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த செய்முறை பரீட்சைகளில் 169,007 பரீட்சார்த்திகள் பங்குப்பற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment

Type and hit enter