OOSAI RADIO

Post

Share this post

சமூக வலைத்தளங்களுக்கு 6 நாட்கள் தடை!

பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வட்ஸ்எப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற  சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 13-ஆம் திகதி முதல் 18-ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு வெறுப்பு பேச்சு போன்றவற்றை தவிர்க்க பாகிஸதானில் தடைவிதிக்கப் படுகிறது.

முகரம் பண்டியை முன்னிட்டு ஜூலை 13-ஆம் திகதி முதல் ஜூலை 18-ஆம் திகதி வரை (முகரம் மாதம் 6-ஆம் திகதி முதல் 11-ஆம் திகதி வரை) பஞ்சாப் மாகாணத்தில் தடைவிதிக்க வேண்டும் அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் சட்டம் ஒழுங்கிற்கான அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.

வெறுப்பு பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமை ஜெனரல் ஆசிம் முனிர் ஏற்கனவே, சமூக வலைத்தளங்களை தீய மீடியா என குறிப்பிட்டள்ளார். அவற்றை டிஜிட்டில் பயங்கரவாதம் என அழைத்த அவர், அதை எதிர்த்து போராடுவது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டது. ஏப்ரல் 2022-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து இராணுவம் மற்றும் அரசாங்கம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 12 கோடி மக்கள் வசித்து வருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter