OOSAI RADIO

Post

Share this post

நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்

போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்வுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பி்ல பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

”போரா ஆன்மீக மாநாடு 07 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளிவாசல் மற்றும் இலங்கை கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டுக்காக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து சுமார் பதினைந்தாயிரம் போரா சமூகத்தினர் நாட்டுக்கு வரவுள்ளனர்.

இந்நிலையில், போரா ஆன்மீக மாநாடு நடைபெறும் 07 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை காலி வீதி, கொழும்பு கோட்டை மற்றும் பம்பலப்பிட்டியில் உள்ள மரைன் டிரைவிற்குள் நுழையும் பல வீதிகள் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மூடப்படவுள்ளது.

அதன்படி, குறித்த வீதிகள் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும் வரை மூடப்படும்” என நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மேலும், மாநாடு நடைபெறும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter