குருவின் குபேர யோகம் இந்த ராசிகளுக்கு!
குபேர யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் மூலம், ஒரு நபர் சமூகத்தில் மிகுந்த மரியாதையைப் பெறுகிறார் என்று கூறப்படுகிறது.
ஜாதகரின் வாழ்க்கையில் செல்வம், மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது என்று சொல்லப்படுகிறது.
அந்தவகையில், குரு பகவான், கடந்த 1.05.2024 முதல் 1.05.2025 வரை ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் குபேர யோகம் உருவாகிறது.
குபேர ராஜ யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு 1 வருடம் பம்பர் பரிசு கிடைக்கும்.
மேஷம்
புதிய வருமான ஆதாரங்கள் கிடைத்து, நன்மை தரும்.
பணத்தட்டுப்பாடு நீங்கும்.
தொழில் வாழ்க்கையில் முன்னேற பல வாய்ப்புகள் அமையும்.
உடல்நலம் இல்லாதவர்கள் உடல்நலம்பெற்று மீள்வர்.
வியாபாரிகளுக்கு இது நல்ல நேரமாக அமையும்.
வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும்.
பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.
லக்ஷ்மி தேவியின் அருளால், செல்வம் மற்றும் தானியங்கள் மிதமிஞ்சி கிட்டும்.
உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு அதிகரிக்கும்.
கடகம்
வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்.
உடல் சுகங்கள் அதிகரிக்கும்.
வெளிநாட்டுப் பயணம் கைகூடும்.
மாணவர்களுக்கு இது உகந்த நேரம்.
கல்விப் பணிகளில் அபரிமிதமான வெற்றி கிடைக்கும்.
குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.
நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த பணிகள் வெற்றி பெறும்.
தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் அடைவீர்கள்.
சிம்மம்
நிதி நிலைமை வலுவாக இருக்கும்.
புதிய வருமான ஆதாரங்கள் உங்களுக்கு நன்மைத் தரும்.
வியாபாரத்தில் லாபம் ஏற்படும். செல்வம் பெருகும்.
மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அபரிமிதமான வெற்றி பெறுவார்கள்.
காதல் உறவுகளில் இனிமை இருக்கும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நடக்கும்.