Post

Share this post

300 பேரை வேலையில் இருந்து நீக்கிய நிறுவனம்!

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் குறைந்து வருவதால், அந்நிறுவனத்திற்கு வருமானம் குறைவதாக கூறி 300 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
உலகின் முன்னணி ஓடிடி (OTT) நிறுவனமான Netflix, பல பிரபலமான திரைப்படங்கள், தொடர்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது.
நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக அமேசான், வால்ட்டிஸ்னி போன்ற பல நிறுவனங்களும் இருந்துவருவதால், சந்தையில் தன்னை நிலைநிறுத்துக்கொள்ள நெட்பிளிக்ஸ் தடுமாறுகிறது.
இதனால் அண்மையில் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் என்ன செய்வது என்று யோசித்து வந்தது. அந்நிறுவனத்தின் வருமானமும் குறைந்து வந்தது.
இதன் காரணமாக கடந்த மே மாதம் 150 பேரை பணியில் இருந்து நீக்கிய நெட்பிளிக்ஸ், இப்போது மேலும் 300 பேரை நீக்கியுள்ளது. இது பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,
‛எங்கள் வருமானம் குறைந்து வருகிறது, அதேநேரம் முதலீட்டிலும் கவனம் செலுத்தும்போது, இதுபோன்ற சில செலவு குறைப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்காக இதுவரை உழைத்தமைக்காக தொழிலாளர்களுக்கு நன்றி. கடினமான கொரோனா காலத்தில், மாற்றத்தை நோக்கி நகர்வதற்கு கடினமாக உழைத்தார்கள்’ எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a comment