கால் துண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்ட பாடகி சுஜீவா!
கொழும்பு அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று (08) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகி கே. சுஜீவா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மதியம் 2 மணியளவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர்கள், இரத்தக் குழாய் சத்திர சிகிச்சை நிபுணர்கள், எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பொது சத்திரசி கிச்சை நிபுணர்கள் ஆகிய 4 குழுக்கள் இந்த சத்திர சிகிச்சையில் பங்குபற்றியுள்ளனர்.
தற்போது பாடகி கே. சுஜீவா நலமாக இருப்பதாகவும், கால் துண்டிக்கப்படாமல் காப்பாற்ற முடிந்தது என்றும் கூறினார்.
பாடகி கே. சுஜீவா மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பதோடு, பிரபல பாடகர் மகிந்த குமாரின் சகோதரியும் ஆவார்.
இவர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பல பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.