Post

Share this post

அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி முடிவு!

மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையை விரிவுபடுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது விமான சேவையை நடத்துவதற்கு அதிக எரிபொருள் தேவைப்படுவதாகவும், எரிபொருளை உற்பத்தி செய்யும் நாட்டுடனான சேவையை அந்த நிறுவனத்திற்கு வழங்கினால், அதனை எளிதாக இயக்க முடியும் என்றும் அரசாங்கம் கருதுகிறது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தற்போது ரூ.31,000 கோடிக்கு மேல் கடன் நிலுவையுடன் செயல்பட்டு வருகிறது.

இது இனி நீடிக்காது என்பதால் அதனை மறுசீரமைக்க அரசு உத்தேசித்துள்ளது.

இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டுமெனவும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a comment