அதில் இருந்து விலகிவிடுவேன்!
தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை துஷாரா விஜயன். இப்படத்திற்கு பின் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்திலும் நடிகர் தனுஷின் ராயன் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் துஷாரா. இந்நிலையில் ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எனக்கு 26 வயது ஆகிறது என்பதால் என்னுடைய 35வது வயது வரை நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகிவிடுவேன். பின் இந்த உலகம் முழுவதும் பயணிக்க விரும்புகிறேன்.
அதற்காக நான் 35 வயதுக்கு மேல் நடிக்கமாட்டேனா என்றால் அப்படியில்லை. இந்த உலகத்தில் நான் பயணிக்காத நாடே இல்லை என்பதை உறுதி செய்யும் அளவிற்கு எல்லா நாடுகளுக்கும் பயணிப்பதில் கவனம் செலுத்துவேன் என்று கூறியிருக்கிறார் நடிகை துஷாரா விஜயன்.