OOSAI RADIO

Post

Share this post

விராட் கோலிக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சை!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான விராட் கோலிக்கு சொந்தமான மது அருந்தும் வசதி கொண்ட பெங்களூர் ஹோட்டல் தொடர்பில் பொலிஸிடம் முறையிடப்பட்டுள்ளது.

இரவு நேரம் வரை அது திறந்திருக்கும் இந்த ஹோட்டலுக்கு அருகே இருப்பவர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்த முறைப்பாடு தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விராட் கோலிக்கு சொந்தமான இந்த ஹோட்டல், சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.

அங்கு நேற்று இரவு அந்த ஹோட்டலில் இருந்து அதிக சத்தம் வந்ததாக அருகில் குடியிருந்தவர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் அங்கு சென்று பார்த்தபோது, அதிகாலை 1:30 மணிக்கு பின்னரும் அந்த ஹோட்டல், விதியை செயல்பட்டுக் கொண்டிருந்தமை தெரிய வந்தது.

பெங்களூர் நகரில் உள்ள பொலிஸ் விதிகளின்படி அதிகாலை மணிக்கு ஹோட்டல்களை மூடிவிட வேண்டும்.

ஆனால், அதிகாலை 1.30 வரை உள்ளே வாடிக்கையாளர்கள் அந்த ஹோட்டலில் இருந்துள்ளனர்.

அத்துடன் அவர்கள், அதிக சத்தத்துடன் இசையை ஒலிக்க விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதனையடுத்தே பொலிஸார் வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இதேவேளை தற்போது விராட் கோலி தனது குடும்பத்தினருடருடன் லண்டனுக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் இது போன்ற விதி மீறல் வழக்குகளின்போது உரிமையாளர்களை நேரில் அழைத்து பொலிஸார் விசாரிப்பார்கள். எனவே பெங்களூரு பொலிஸ் விராட் கோலியை நேரில் அழைத்து விசாரிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a comment

Type and hit enter