Post

Share this post

விஜயகாந்த் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நாளொன்றுக்கு 2 ஆயிரம் போ் வரை வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளாா் விஜயகாந்த்.

Leave a comment