Post

Share this post

இலங்கைக்கு ஆபத்தான 3 வாரங்கள்…

மிகவும் கடினமான 3 வாரங்களை தற்போது இலங்கையர்கள் எதிர்நோக்கி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்தக் காலப்பகுதி தொடர்பில் எச்சரிக்கை விடுத்திருந்தேன். நெருக்கடியான காலப்பகுதிகளில் நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது.
மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கும் நிலையில், நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகின்றனர். விரைவில் நாடு பழைய நிலைக்கு திரும்பும் என பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

Leave a comment