கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன்?
முன்னாள் கிரிக்கெட் வீரர் தம்மிக்க நிரோசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜொன்டி என அழைக்கப்படும் தம்மிக்க நிரோசன் அம்பலாங்கொடை கந்தவத்த பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உள்ளார்.
இறக்கும் போது தம்மிக்க நிரோசனுக்கு 41 வயது என தெரிவிக்கப்படுகிறது.
அவரது வீட்டில் வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் தம்மிக்க நிரோசன் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியின் சார்பில் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் என்பதுடன், முதல்தர போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.