Post

Share this post

இலங்கையில் பொருள்களின் விலைகள் குறைப்பு

பருப்பு, சினி, கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகள் குறைவடையவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன.
இதேவேளை நாட்டில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கையில் விண்ணைமூட்டும் அளவுக்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்தன.
இதனால் மக்கள் கடும் திண்டாட்டத்தில் இருந்த நிலையில் தற்போது பொருகளின் விலைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றமை மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய, 600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட பருப்பு ஒரு கிலோ மொத்த விலை 410 ரூபாயாகவும் 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சீனி 270 ரூபாயாகவும் கிழங்கு 150 ரூபாயாகவும் வெள்ளைப்பூடு 420 ரூபாயாகவும் 1,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ செத்தல் மிளகாயின் மொத்த விலை 1,300 ரூபாயாகவும் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recent Posts

Leave a comment