Post

Share this post

கோட்டபாய குறித்து மஹிந்த வெளியிட்ட முக்கிய தகவல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் இலங்கை வருவதற்கான திகதியை கூறவில்லை என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பியோடியது ஏன்? என மகிந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மஹிந்த, கோட்டாபய தப்பிச் சென்றதான குற்றம் சுமத்துவது யார்? என மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் தான் குற்றம் சுமத்துகின்றனர் என ஊடவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
யார் என்ன வேண்டுமானாலும் கூற முடியும் என அவர் மஹிந்த குறிப்பிட்டுள்ளார். எனினும் அவை அனைத்தும் உருவாக்கப்பட்ட கதைகள்.
கோட்டாபய மருத்துவ பரிசோதனை செயற்துக் கொள்வதற்காகவே வெளிநாடு சென்றுள்ளார். அவர் எனக்கும் கூறவிட்டு தான் சென்றுள்ளார். எனினும் அவர் நாடு திரும்பும் நாளை எனக்கும் கூறவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment