விலங்குகளுக்கு உணவு அளித்தால் பாவம் தீரும்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவருடைய கர்ம பலன்கள் பொறுத்து தான் நம் ஜாதகத்தில் நவகிரகங்களின் அமைப்பும், அதன் மூலம் ஏற்படக்கூடிய பலன்களும் அமைகிறது. சில கிரகங்களின் அமைப்பால் ஏற்படக்கூடிய கிரக தோஷத்தில் இருந்து விடுபட விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க தோஷ நிவர்த்தி ஆகும் எனக் குறிப்பிடப்படுகிறது.
சிட்டுக்குருவி, எறும்புகள், காகம், அணில், புறா, கிளி என பறவைகளுக்கும், நாய் , மாடு, மீன் போன்ற விலங்குகளுக்குத் தொடர்ந்து உணவு அளிப்பதன் மூலம் நம்முடைய மன அமைதி, திருப்தி அதிகரிப்பதோடு நம்முடைய கிரக தோஷங்களும் நிவர்த்தியாகும். நம்முடைய வீட்டில் யாருக்கு நம் உடல் நல பிரச்சினைகள் இருப்பின் அதன் தீவிரம் குறையும்.
ஒருவரின் ஜாதகத்தில் சூரியனின் அமைப்பானது சாதகம் இல்லாமல் அமைந்து இருப்பின், அந்த நபர் கோதுமை, நெய் அல்லது சமைத்து உணவுகளை ஏழை எளியவர்களுக்குக் கொடுக்கலாம். கோதுமையை விலங்குகளுக்கு அளிக்கலாம். மேலும் சூரிய பகவானே வழிபாடு செய்வதால் தோஷங்கள் நீங்கும், சூரியனின் நல்லருளை பெற்றிடலாம்.
நவகிரகங்களில் சந்திரன் ஏற்படக்கூடிய தோஷத்தை நிவர்த்தி செய்ய ஏழைகளுக்கு அரிசி அல்லது தண்ணீர் தானம் கொடுப்பது நன்மை தரும். அதோடு உங்களை மன அழுத்தம் குறையும். சந்திர தரிசனத்தன்று வழிபாடு செய்வதும், சந்திர மந்திரத்தை உச்சரிப்பதால் மன அமைதியைப் பெறலாம்.
மங்களன், அங்காரகன் என அழைக்கப்படக்கூடிய செவ்வாய் பகவான் தோஷம் ஜாதகத்தில் இருப்பின், சிவப்பு நிற பசுவிற்கு வெல்லம் கொடுப்பது சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் நண்பர்கள், சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு நீங்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறலாம்.
நவகிரகங்களின் இளவரசன என அழைக்கப்படக்கூடிய புதன் பகவானின் தோஷம் தீர்ந்து, அவரின் நல்ல அருள் பெற்றிட பச்சை பயிறு தானம் செய்வதும், கால்நடைகளுக்கு அறுகம்புல், அகத்திக்கீரை கொடுப்பது நன்மை தரும். சிவ வழிபாடு செய்து அவித்த பச்சை பயிறு பிரசாதமாக கொடுப்பது நன்மை தரும்.
மங்களங்களைத் தரக்கூடிய குரு பகவான் நல்லருளை பெற்றிட பசுவிற்குக் கொண்டைக்கடலையே கொடுப்பது நன்மை தரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைப்பேறு கிடைக்கவும், பிள்ளைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றமாக இருக்கும்.
பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு சோளத்தை உணவாக கொடுப்பதன் மூலம் சுக்கிர கிரகத்தின் தோஷங்கள் குறையும். மேலும் சுக்கிர பகவான் அனைவரும் வழிபாடு செய்ய உங்களின் அழகு, வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க்கையில் ஆடம்பரமும், செல்வ செழிப்பும் ஏற்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.
பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உளுந்து அல்லது கடுகு எண்ணெய் கலந்த உணவை கொடுப்பது மூலம் சனி தோஷம் குறையும். சனி பகவானால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் பிரச்சனைகள் நீங்கும்.
கர்ப்ப கிரகமான அதாவது பகவானின் தோஷம் குறைய, பறவைகளுக்கும், விலங்குகளுக்கு ராகியால் செய்த உணவை அளிப்பது நன்மை தரும். குறிப்பாக காகம் மற்றும் நாய்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் சனி, ராகு தோஷம் நீங்கும்.
ஏழு வகையான தானியங்களான நவதானியங்களால் செய்யப்பட்ட மாவு உருண்டையை மீன்களுக்கு கொடுக்க கேது தோஷம் நீங்கும். மேலும் கேதுவின் மூலம் நேர்மறையான தாக்கத்தைப் பெறலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் பழைய சொத்துக்கள் திரும்ப கிடைப்பதோடு, உங்களின் வருவாய் அதிகரிக்கும். அதன் மூலம் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த மாவை மீன்களுக்கு உணவாக அளிக்க பிரச்சனைகள் குறைவதோடு, வீட்டில் மங்களகரமான சூழல் உண்டாகும்.