OOSAI RADIO

Post

Share this post

2 மனைவி – சோகமான முடிவு – உண்மையான வாழ்க்கை கதை!

தமிழ் சினிமாவை எதார்த்த சினிமாவுக்கான அடையாளத்தைத் தேடிக் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இயக்குநர் மகேந்திரன் அவர்கள். சினிமாவில் உசசத்தை தொட்டவர்கள் என்று யாரும் இல்லை. வாழ்நாள் முழுவதும் தினந்தோறும் எதையாவது கற்றுக் கொண்டே தான் இருக்க வேண்டும் என்று எப்போதும் சொல்பவர். சினிமாவில் நிறைய தவறுகள் இருக்கின்றன., சினிமாவே வேண்டாம் என்று சொந்த ஊருக்கே ஓடிப்போனவரை எம்ஜிஆர் மீண்டும் சென்னைக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இவர். இவருடைய வாழ்க்கையில் இத்தனை சோகங்களா?

1939 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி இளையாங்குடியில் பிறந்தவர். இளையாங்குடியில் பள்ளிப்படிப்பும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பியூசியும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.ஏ பொருளாதாரமும் படித்தார்.

சட்டக்கல்வி படிப்பதற்காக தான் முதன்முதலில் சென்னை சென்றார். பத்திரிகையில் வேலை பார்த்த போது தான் பத்திரிகையாளர் சந்திப்பின் போது எம்ஜிஆரை மீட் செய்யவே, ஏற்கனவே கல்லூரி நிகழ்ச்சியில் சந்தித்திருந்த எம்ஜிஆர் தன் வீட்டிலேயே மகேந்திரனுக்கு தங்க இடம் கொடுத்து, கதைகள் எழுதும் வேலைகளைக் கொடுத்து, அதன்மூலம் நிறைய நாடகங்களையும் உருவாக்கினார்கள்.

இன முழக்கம், துக்ளக் ஆகிய பத்திரிகைகளில் பத்திரிகையாளராக தன்னுடைய எழுத்துப் பணியைத் தொடங்கியிருக்கிறார்.

இன முழக்கம் பத்திரிகையில் ஒருமுறை ஆயிரத்தில் ஒருவன் படம் வந்தபோது அதற்கு எதிர்மறையான விமர்சனம் ஒன்றை எழுதிவிட்டார். ஆனால் எம்ஜிஆர் கோவப்படாமல, சில நாட்கள் கழித்து பொன்னியின் செல்வனை திரைப்படமாக மாற்றுவதற்காக கதை, திரைக்கதைகளை எழுதுவதற்கு எம்ஜிஆர் பெரிய எழுத்தாளர்களுக்கு இணையாக, மகேந்திரனை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர். தனக்கு தெரிந்த இயக்குநரிடம் உதவியாளராகவும் சேர்த்து விட்டிருக்கிறார்.

எஸ். மகேந்திரன் அவர்கள் ஜாஸ்மின் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு ஜான் என பெயர் சூட்டினர். மகேந்திரனின் மகனும் சினிமாவில் நுழைந்தார். அவருடைய முதல் படமே விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படமாகும்.

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் பிரேமி.. படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தவர். சிறு வயதிலேயே தந்தையின் வற்புறுத்தலால் நாட்டியம் கற்றுக் கொண்டார்.

சிவாஜி கணேசனின் உறவினாராக இவருடைய தந்தையின் மூலம் சிவாஜி கணேசனுக்கு அறிமுகமாகி, பின் திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். பிறகு தன்னுடைய நடிப்பி்ன் திறமையால் பல நூறு படங்களை நடித்திருக்கிறார். நாடகங்கள், சினிமா என பிஸியாக இருந்தார். ஷூட்டிங்கில் கூட புத்தகமும் கையுமாகத் தான் இருப்பார். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, முத்துராமன் என டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் செந்தாமரையின் மூலமாக இயக்குநர் மகேந்திரனுக்கு அறிமுகம் ஆனார் பிரேமி. மகேந்திரனின் முள்ளும் மலரும் படத்திலேயே அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை மறுத்துவிட்டார்.

ஆனால் அதன்பின் இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாற, உதிரிப்பூக்கள், ஜானி, பூட்டாத பூட்டுக்கள் உள்ளிட்டமகேந்திரனின் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்த மகேந்திரன் – பிரேமியின் நட்பு காதலாக மலரத் தொடங்கியது.

ஏற்கனவே மகேந்திரனுக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான் என்று தெரிந்தும் கூட மகேந்திரன் மீது இருந்து மரியாதை மற்றும் அன்பால் அவருடைய காதலை ஏற்றுக் கொண்டார்.

மகேந்திரனுடன் காதல் உண்டான பின், இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கவே சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டு, தன் இல்லற வாழ்வில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

மகேந்திரனுக்கும் இடையில படங்கள் எதுவும் இல்லாததால் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருந்தது.

முதல் மனைவி – குழந்தையை கவனிக்க வேண்டும், காதல் மனைவி பிரேமி மற்றும் அவருக்குப் பிறந்த குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலை வந்தது.

குடும்பத்தின் வறுமையை சமாளிக்க தனக்கு தெரிந்த தையல் வேலை, அப்பளம் செய்து விற்பது போன்றவற்றை செய்து வந்த போதிலும், இந்த நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் பிரேமியை விட்டு பிரிந்து சென்று விட்டார் மகேந்திரன். அதன்பின் மகனின் எதிர்காலம் கருதி பிரேமி தாய் வேடம் உள்ளிட்டவற்றை ஏற்று மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார்.

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வந்து, மகனும் வளர்ந்த பின் பிரேமியின் மீதிருந்து காதலும், குழந்தையுடன் அவரை விட்டு விட்டு பிரிந்தது, அவருக்கு செய்த துரோகம் என நினைத்து பல இடங்களில் வருந்தியிருக்கிறார் மகேந்திரன்.

தனக்கும் பிரேமிக்குமான காதல் வாழ்க்கைக்கு இடையில் இருந்த நண்பர்கள் பலரிடமும் பிரேமியை கைவிட்டது மிகப்பெரிய தவறு எனறு வருந்தியும் இருக்கிறார்.

மிகப்பெரிய அறிவாளியாகவும் படைப்பாளியாகவும் கலைஞனாகவும் இருந்த மகேந்திரனின் வாழ்க்கைக் கதையில் இப்படியொரு காதலும் அதன் பின்னான சோகமும் இருந்திருக்கிறது.

Leave a comment

Type and hit enter