OOSAI RADIO

Post

Share this post

Japan செல்ல e Visa முறை அறிமுகம்!

ஜப்பான் நாட்டிற்கு சுற்றுலா செல்ல விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு குறுகிய கால சுற்றுலா விசாவிற்கான மின்னணு விசா அமைப்பை ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில், அவுஸ்திரேலியா, பிரேசில், கம்போடியா, கனடா, சவுதி அரேபியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, தைவான், துபாய் தவிர பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் குடிமக்கள் மற்றும் வசிப்பவர்கள் இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்னணு விசா ஒரு முறை நுழைவுக்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் அதிகபட்சமாக 90 நாட்கள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா (15 அல்லது 30 நாட்கள்) மற்றும் வியட்நாம் (15 நாட்கள்) நாட்டவர்களுக்கு குறைந்த கால வரம்பு உள்ளதெனவும் மின்னணு விசாக்கள் விமானம் மூலம் பயணம் செய்பவர்களுக்கும் சாதாரண விசா உள்ளவர்களுக்கும் மட்டுமே கிடைக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மின்னணு விசா வைத்திருக்கும் பயணிகள் விமான நிலையத்தில் விசா வழங்கும் அறிவிப்பை இணையத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter