ஆட்டம் காணும் பங்குச் சந்தை – தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு?
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிலவி வரும் நிச்சயமற்ற பொருளாதார சூழலுக்கு மத்தியில், தங்கம் விலையானது பாதுகாப்பு புகலிடமாக அமையலாம் என்ற கருத்தும் சந்தை நிபுணர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய நிலையில், அதன் பிறகு புராபிட் புக்கிங் காரணமாக பியூச்சர் சந்தையில் விலை சரிவைக் கண்டு வந்தது.
இந்த சரிவானது இன்னும் தொடருமா? அல்லது இந்த நிலையில் முதலீட்டை தொடரலாமா? என்ற சந்தேகம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.