OOSAI RADIO

Post

Share this post

அம்மாவுக்கு முன்னால மகன் செய்த வேலை!

ஷாரிக் – மரியா திருமணத்திற்கு முன்னதாக அவர்களுடைய ஹல்தி நிகழ்ச்சி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் கோலாகலமாய் நடைபெற்றிருக்கிறது.

சின்னத்திரை பார்வையாளர்களுக்கு பரிச்சயமான ஜோடி ரியாஸ்கான் – உமா ரியாஸ்கான். சின்னத்திரை, வெள்ளித்திரை என இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் மக்களை என்டர்டெயின் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில் விஜய் ஹாட்ஸ்டார் ஓடிடி பிளாட்ஃபார்மில் வெளியாகி இருக்கும் `ஹார்ட் பீட்’ வெப் சீரிஸிலும் ரியாஸ்கான் நடித்திருக்கிறார். இவர்களுடைய மூத்த மகன் ஷாரிக் ஹாசன். இவர் பிக்பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

ஷாரிக், மரியா என்பவரை காதலித்து வந்தார். அவருடன் ஷாரிக் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை ஷாரிக் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னரே பகிர்ந்து வந்தார். இந்நிலையில் ஷாரிக் – மரியா திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது.

ஷாரிக் – மரியா திருமணத்திற்கு முன்னதாக அவர்களுடைய ஹல்தி நிகழ்ச்சி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட் ஒன்றில் கோலாகலமாய் நடைபெற்றிருக்கிறது. இதில் ஷாரிக் – மரியாவின் குடும்பத்தினரும், நண்பர்களும் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தியிருக்கின்றனர். ஹல்தி புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்தச் செய்தியை உமா ரியாஸ்கான் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு பல திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடைய திருமண நிகழ்வில் சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த இருக்கின்றனர்.

Leave a comment

Type and hit enter