வந்ததுக்கு வேட்டிதான் மிச்சம் – சுரத்தில்லாத உதயநிதி!
மக்களவைத் தேர்தலில் தி.மு.க பெற்ற 40/40 வெற்றியைத் தொடர்ந்து, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தி.மு.க தேர்தல் பார்வையாளர்களை உதயநிதி சந்தித்து நன்றி தெரிவிக்கும் கூட்டம் கடந்த 23 ஆம் திகதி நடந்தேறியது.
சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் உதயநிதியின் அரசு பங்களாவான குறிஞ்சி இல்லத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் உற்சாகம் மிஸ்ஸிங்! எனவே, ‘குறிஞ்சி இல்லத்தில் என்ன நடந்தது..?’ என்று அவர்களிடம் விசாரித்தோம்.