டெங்கு காய்ச்சல் – சீரியல் நடிகைக்கு நடந்த அனர்த்தம்!
அத்தனை இயல்பாக அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து ஆடியன்ஸ் மத்தியிலும் ஸ்கோர் செய்தார்.
`சுமங்கலி’ தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் திவ்யா கணேசன்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி' தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்தவர்.
மகாநதி’ தொடரில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரதீபா அந்தத் தொடரிலிருந்து விலக அவருக்கு பதிலாக திவ்யா அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
மகாநதி' தொடர் ஆடியன்ஸூம் திவ்யாவை அந்தக் கதாபாத்திரத்தில் ஏற்றுக் கொண்டனர். அத்தனை இயல்பாக அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து ஆடியன்ஸ் மத்தியிலும் ஸ்கோர் செய்தார். இந்நிலையில் தற்போது
மகாநதி’ தொடரிலிருந்து திவ்யா விலகப் போவதாக அவருடைய ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்.
`டெங்கு காய்சல் காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறேன். அதனால் என்னால் தொடர்ந்து மகாநதி சீரியல் ஷூட்டிங்கிற்கு செல்ல முடியவில்லை. எனக்கு பதிலாக மகாநதி டீம் அந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவரைத் தேர்வு செய்வார்கள் என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தக் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க முடியாததற்கு என்னுடைய மன்னிப்பைக் கோருகிறேன். கங்காவிற்கு நீங்கள் தொடர்ந்து கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன்!’ எனக் குறிப்பிட்டு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.