பீரியட்ஸ் நேரத்தில் உடலுறவு?
பெண்கள் மாதவிடாய் நாள்களில் இணையுடன் உடலுறவு கொள்ளலாமா, கூடாதா என்பது குறித்த சந்தேகம், எல்லா தலைமுறைகளிலும் தொடர்கிறது. இதுகுறித்த மிக முக்கியத் தகவல்களைப் பகிரும் சென்னையைச் சேர்ந்த பிரபல செக்ஸாலஜிஸ்ட் காமராஜ், கருத்தரிப்பதைத் தடுக்க நினைப்பவர்கள், குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் தாம்பத்யத்தில் செய்யவேண்டிய முக்கியமான விஷயங்களையும் இங்கே பகிர்கிறார்.
“மாதவிடாய் நாள்களில், சம்பந்தப்பட்ட ஆண் – பெண்ணுக்கு உறவுகொள்ள விருப்பம் இருக்கிறது என்றால் தாராளமாக ஈடுபடலாம். அதில் எந்தத் தவறும் கிடையாது. மாதவிடாயைச் சுற்றியுள்ள மூடநம்பிக்கைகள்தான் பீரியட்ஸ் நாள்களில் உடலுறவு கொள்ளக்கூடாது என்ற தவறான புரிதலைப் பலரிடமும் ஏற்படுத்தியிருக்கிறது.