FaceBook இல் பணத்தை செலவிட்ட ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் பிரசார விளம்பரங்களுக்காக கடந்த மாதத்தில் மெட்டா நிறுவனத்திற்கு பெருந்தொகை பணம் செலவிடப்பட்டுள்ளது.
உள்ளூர் அமைப்பான Hashtag Generation வெளியிட்ட தரவுகளின்படி, விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை மெட்டா விளம்பரங்களுக்காக மட்டும் 5.1 மில்லியன் ரூபாய் ( 17,000) டொலர்களுக்கு மேல் செலவிட்டதாக கூறப்படுகின்றது.
ரணிலுடன் இணையுங்கள் என்ற முகநூல் பக்கத்தில் 13,093 டொலர் பெறுமதியான 44 விளம்பரங்கள் முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும், ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து 10 விளம்பரங்களுக்காக 2,323 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட 17 விளம்பரங்களுக்காக 661 டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோரை உள்ளடக்கமாக கொண்ட பக்கமான ‘Next Politics’ என்ற முகநூல் பக்கம், இந்தக் காலப்பகுதியில் 54 விளம்பரங்களுக்காக $354 செலவிட்டுள்ளது.
எவ்வாறாயினும், ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் உள்ளடக்கத்துடன் கூடிய முகநூல் பக்கங்களும் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.