மக்களின் நலனை கருத்திற் கொண்டு ரணில் எடுத்த முடிவு!
இலங்கை மக்களின் துயரங்களை தீர்க்கவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றையதினம் இடம்பற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், மக்களின் பசி தீர்க்கவே ஜனாதிபதித் தேர்தலில் கட்சி வேறுபாடின்றி, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் ஆண்களுக்கு சமமாக, பெண்களின் உரிமைகள் வலுவூட்டப்பட்டு பாதுகாக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.