OOSAI RADIO

Post

Share this post

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு கொடுப்பனவு!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்காக சமுர்த்தி வங்கியிலிருந்து வழங்கப்பட்ட 3,241 கோடி ரூபாய் பணத்தினை மூன்று ஆண்டுகள் கடந்தும் அந்த வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை சமுர்த்தி வங்கியினால் 11,929 மாவீரர்களுக்காக வழங்கப்பட்ட 355 கோடி ரூபா கடன் தொகையில் 19 கோடி ரூபாவிற்கு மேல் இதுவரை வசூலிக்கவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய மாவீரர் வீடமைப்புத் திட்டத்துக்காக சமுர்த்தி அதிகாரசபைக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் காலாவதியானதால், தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு கோவிட் நோயினால் உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் முறைசாரா முறையில் இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter