ஆடி 4வது செவ்வாய் – இப்படி வழிபாடு செய்யுங்கள்!
செவ்வாய்கிழமை என்றாலே அம்மனுக்கும், முருகனுக்கும் உரிய மிக சிறப்பான வழிபாட்டு நாளாகும். இந்த ஆடி செவ்வாயில் விரதம் எடுப்பதால் நமக்கும் நம் குடுத்திலும் எவ்வாறான நல்ல பலன்களை தரும் என நாம் இங்கு பார்ப்போம்.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமையில் அம்மனை வழிபடுவதால் பலவிதமான பிரச்சனைகள் நீங்கும். வீட்டில் மகிழ்ச்சி, சுபிட்சம் என்பது ஏற்படும். இந்த ஆண்டு ஆடி மாதத்தில் நான்கு செவ்வாய்கிழமைகள் அமைந்துள்ளன.
ஆடி மாதத்தின் நான்காவது செவ்வாய் மற்றும் ஆடி கடைசி செவ்வாய்கிழமை ஆகஸ்ட் 13ஆம் திகதி வருகின்றது. இந்த நாளில் அம்மனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும், கணவன்-மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிப்பதற்காகவும் வழிபாடு செய்யலாம்.
அதோடு குடும்பத்தில் இருக்கும் திருமணம் போன்ற சுப காரிய தடைகளையும் இந்த வழிபாடு நீக்கி விடும். ஆடி கடைசி செவ்வாய் அன்று காலையில் வீட்டில் மாவிளக்கு செய்து, அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு நெய் விட்டு விளக்கேற்றி வழிபடலாம்.
பிறகு அதை அங்கு வருபவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். அதே போல் மாலையில் வீட்டில் இருக்கும் அம்மன் படத்தை ஒரு மனைப்பலகையில் சிவப்பு நிற துணி விரித்தோ அல்லது மாக்கோலம் போட்டோ அதன் மீது வைக்கலாம்.
அம்மனுக்கு வாசனை மிகுந்த மலர்கள் சூட்டு, சிவப்பு நிற குங்குமத்தால் அம்மனுக்கு அர்ச்சனை செய்யலாம். பொதுவாகவே செவ்வாய் கிழமைகளில் மாலை நேரத்தில் அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை தினமும் நாம் நெற்றியில் வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பானதாகும்.
சுக்கிரன் மற்றும் செவ்வாய் இணைவிற்குரிய மல்லிகைப்பூ, மரிக்கொழுந்து அல்லது செண்பகப்பூ ஆகியவற்றை கேதுவிற்குரிய வாழை நாளில் தொடுக்க வேண்டும்.
இந்த பூஜை அருகில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான் கோவிலுக்கு எடுத்துச் சென்று, காலை 6 முதல் 7 வரையிலான சுக்கிர ஓரையில் முருகனுக்கு சாற்ற வேண்டும். பூஜை சாற்றிய பிறகு எட்டு நெய் விளக்குகள் ஏற்ற வேண்டும்.
அதில் சிறிது குங்குமப்பூ, ஒவ்வொரு விளக்கிலும் நான்கு டைமண்ட் கற்கண்டுகள் போட்டு விளக்கேற்றி, ஆறு முறை முருகனை வலம் வந்து வழிபட வேண்டும்.
பிறகு நம்முடைய மனக்குறை அல்லது வேண்டுதலை முருகனிடம் சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். ஆடிச் செவ்வாய் அன்று இந்த வழிபாட்டினை செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும்.