OOSAI RADIO

Post

Share this post

வேகமாக பரவிவரும் கொடிய வைரஸ்…

உலகில் உள்ள பல நாடுகளில் குரங்கம்மை வைரஸ் தற்போது வேகமாகப் பரவி வருகின்றது.

இந்நிலையில் இலங்கையில் குரங்கம்மை வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகபடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குரங்கம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது.

இதேநேரம் இதற்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார அமைப்பு விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், குரங்கு காய்ச்சலானது ஆப்பிரிக்க கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், கொங்கோ குடியரசில் குரங்கு காய்ச்சலினால் பலியானோர் எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15,664 ஆக அதிகரித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Type and hit enter